-->

Monday, February 19, 2018

Study Materials for Animal Husbandry and Veterinary Services Jobs

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை வேலை வாய்ப்பு

Study Materials

1.  ஜெர்சி பசு இந்திய இனத்தினை சார்ந்தது சரியா தவறா
தவறு
2. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியாவில் ஜெர்சி மாட்டினம் புகுத்தப்பட்டது.
3. அம்ரித் மகால் இந்திய மாட்டினம் வகையை சார்ந்தது
4. கர்நாடகாவை சேர்ந்த இந்திய மாட்டினமான அம்ரித் மகாலுக்காக 2000 ஆம் ஆண்டில் இந்திய தபால் துறையால் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது
5. கிர் பசு இந்திய நாட்டின் வகையைச் சேர்ந்தது
6. இந்தியாவில் அதிக அளவில் பால் உற்பத்திக்கு சிறந்த பசு கிர்
7. ஒரொய்ச் (aurochs) வகை மாடுகள் தற்போது அழிந்து விட்ட மாட்டினம் ஆகும்
8. சென்னை பெரம்பூர் இறைச்சி கூடம் 2012 ல் அமைக்கப்பட்டது
9. சென்னை பெரம்பூர் இறைச்சிக்கூடம் ஒரு மணிநேரத்தில் 60 மாடுகளை வெட்டும் திறன் கொண்டது.
10. உம்பளச்சேரி மாடினம் தமிழகத்தின் இனமாகும். இவை நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவை.
11. உம்பளச்சேரி காளை மாடுகள் குறைந்த உணவினை உட்கொண்டு அதிக நேரம் அதிக பளு சுமக்கும் திறன் படைத்தவை. ஆறு மணிநேரம் தொடர்ந்து வேலை செய்யும் தகுதி படைத்தவை.
12. 2.5 டன் (2500 கிலோ) எடையினை இலகுவாக 20 கிலோமீட்டர் தூரம் இழுக்கும் திறன் கொண்டவை உம்பளச்சேரி காளையினம்.
13. சாகிவால் பசுஇனம் பஞ்சாப் மாநிலத்தினை சார்ந்தவை.
14. கெரிகார், பொன்வார், கங்கோத்ரி, கென்கதா (Kherigarh, Ponwar, Gangatiri and Kenkatha) உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த மாட்டினங்கள்.
15. இந்தியாவில் அதிக பால் உற்பத்தி செய்யும் மாநிலம் எது. உத்திரப்பிரதேசம்
16. நகோரி, ரதி, தர்பார்கர், கங்ரெஜ் (Nagori, Rathi, Tharparkar and Kankrej) மாட்டினங்கள் ராஜஸ்தானின் பூர்வீகங்களாகும்.
17. தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் (National Dairy Development Board) ஆனந்த், குஜராத்தில் உள்ளது.
18. தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் 1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
19. ஆவின் நிறுவனம் 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
20. வெண்மைப் புரட்சி (Operation Flood) என்பது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம் ஆகும்.
21. வெண்மை புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? வர்கிஸ் குரியன்.
22. உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி திட்டம் எது ? வெண்மை புரட்சி
23. Tamil Nadu Livestock Development Agency (TNLDA) 2002 ல் உருவாக்கப்பட்டு 2003 ல் செயல்பாட்டுக்கு வந்தது.
24. 1989ல் தமிழ்நாடு கால்நடை பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது (TANUVAS).
25. தமிழ்நாடு கால்நடை பல்கலைக் கழகம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் இருந்து பிரித்து தனிப் பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டது.
26. சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி (Madras Veterinary College) சென்னையில் 1876 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
27. சீரம் பயிலகம் (Serum Institute) 1932 ல் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டது.
28. Veterinary Biological Research Institute (V.B.R.I.) என்பது Institute of Veterinary Preventive Medicine (I.V.P.M) என்பதின் பழைய பெயர்.

References : (candidates are requested to browse the following URL for further information)

Notes courtesy : Karritv (through Facebook)

பல சமயங்களில் கன்று போட்ட உடன் மாடு நன்றாக இருக்கும். கன்று போட்டு நான்கு ஐந்து நாட்கள் கழித்து மாடு படுத்துவிட்டால் எழுந்து நிற்க முடியாமல் படுத்தே இருக்கும். இடுப்பு பகுதி உணர்ச்சி குறைவாக இருக்கும். பால் காய்ச்சல் எனக்கருதி கால்சியம் குளுகோஸ் மருந்துகள் போட்டாலும் மாடு எழுந்து நிறகாது. ஆனால் தீவனம் தின்னும். இதற்கு காரணம் மாடு கன்று ஈனும்போது வழக்கத்தை விட இடுப்பு எலும்பு( hip joint) விரிவடைந்து விடுவதே. கன்றின் எடை 25 கிலோவிற்கு மேல் இருக்கும் மாடுகளில் இந்த குறைபாடு இருக்கும். மேலும் சத்து குறைபாடு; இடுப்பு பகுதி நரம்பு மற்றும் இரத்தக்குழாய் கசங்குதல் மற்றும் சவ்வு பிரச்சினை அனைத்தும் இருக்கும். இதற்கு நான் படத்தில் காட்டியபடி மாட்டை தூக்கி நிறுத்தி கட்டி அப்படியே 3__5 நாட்களுக்கு விடவேண்டும். நல்ல சத்தான ராகி கஞ்சி, தட்டு , இவற்றுடன் கால்சியம் வைட்டமின் திரவ டானிக் தரலாம். கூட நாயுருவி; அகத்தி மற்றும் முருங்கை இலை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். மேல்பூச்சாக நான் கூறும் சிகிச்சையை செய்யுங்கள். மாடு கண்டிப்பாக கசாப்புக்கு போகாது. பிரண்டை இரண்டுகிலோ ; கருவேலன் மரப்பட்டை அரை கிலோ எடுத்து நன்றாக உரலில் கூழ்பதத்தில் இடித்து எடுத்துக்கொண்டு இத்துடன் அரைகிலோ ராகிமாவு ; சலித்த புற்று மண் அல்லது களிமண் அரைகிலோ இவற்றை ஐந்து லிட்டர்தண்ணீரில் கலந்து சட்டியில் வைத்து அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கிண்டி கொதி நிலை வந்ததும் இறக்கி வைத்து இளம்சூட்டில் ஐந்து கோழி முட்டை வெள்ளை கருவை ஊற்றி கலந்து இந்த மருந்து கலவையை ஆறியபின் எடுத்து மாட்டின் இடுப்பு பகுதி கால் சப்பை மற்றும் முன் கால் சப்பைகளில் மொத்தமாக பூச வேண்டும். இதுபோல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை போட வேண்டும். எனது பத்தாண்டு அனுபவ ஆராய்ச்சி மருந்து இது. கிடையாக கிடந்த மாடு கூட எழுந்து நடக்கும். கூட முருங்கை இலை அகத்தி உள்ளே கொடுங்கள். கண்டிப்பாக மாடு நடக்கும். இழந்த பால் திரும்பும். முடிந்தவரை ஷேர் செய்யுங்கள். என்னுடைய இந்த சிறிய முயற்சிக்கு படித்த விவசாயம் செய்வோர் ஆதரவு தாருங்கள். கால்நடை சிகிச்சையில் புது புரட்சி செய்வோம்.


·         http://www.tanuvas.tn.nic.in/
·         http://www.aavinmilk.com/
·         http://www.amul.com/
·         http://www.nddb.org/
·          


20 comments

materials are nice. keep on give notes like this sir.thank you

Read 10th Std Science and Maths Books. If you have time read 6th Std to 10th Std science and maths books. Ready all materials related to TNPSC Group 4 level / VAO Exam

mam liverstock inspector'ku which books? pls reply me

In aapplication form Should I fill up the hall ticket page also va?

In aapplication form Should I fill up the hall ticket page also va?

Hi mam first announced syllabus for 10std level general science and zoology and veterinary related questions if u any changes tel me mam

Hall Ticket form la Roll Number Registration Number enna fill panrathu

Hall Ticket form la Roll Number Registration Number , exam center enna fill panrathu

Hi mam,
instead of updating quiz, u can update materials like this... This is very useful to study.

roll no. and regn number are official area, you no need to fill it.

Read well SSLC level science and maths study materials.

Mam livestock inspector exam question paper format ask..English or tamil..??

where can i get the model question paper ?

We need still more notes...Please update notes once in a day sir.

They will ask question in animal husbandry section very small quantity only. Maximum question will be raised from 10th Std Level. Read accordingly. You can practice all model questions published in Dinamani, Dinamalar, Dinathanthi (we already provided here).

the exam date for live stock inspector post


EmoticonEmoticon