-->

Saturday, December 2, 2017

Daily Current Affairs 2nd December 2017 Text Notes

Daily Current Affairs  - 2nd December 2017

National :

  • நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தலைமையில் வரும் 31.01.2018 க்குள் சாலைபாதுகாப்புக் கமிட்டியை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு.
  • மேடம் துஸாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியம் உலகில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஏற்கனவே உள்ளது. தற்போது 23வது கிளையாக இந்தியாவில் டெல்லியில் இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
  • உச்சநீதிமன்றத்தால் 22.08.2017 முதல் முத்தலாக் தடைசெய்யப்பட்டுள்ளது. மத்தியஅரசு இதற்கு முறைப்படியான சட்டம் இயற்றப்பட உள்ளது. இதில் 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கும்.
  • தெலுங்கானா மாநிலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான ஆதார் அட்டை 5 வயது வரை செல்லுபடியாகும்.
  • இந்தியாவில் சொந்தமாக 6 நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்க திட்டம்.
  • சென்னையில் கடற்படைத் தளம் அமைக்கப்பட உள்ளது.
  • குறைந்த கார்பனை வெளியிடும் திறன் கொண்ட 800 மெகாவாட் உற்பத்தி திறனுடன் தெர்மல் பிளாண்ட் இந்தியாவில் 2019ல் அமைக்கப்பட உள்ளது.
  • 6 புதிய நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதவி ஏற்பு. மொத்தம் 60 நீதிபதிகள் உள்ளனர். இதில் 11 பேர் பெண்கள்.
  • 2009 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டது. திருநெல்வேலி பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய அணைகளின் உபரிநீரை சேமிக்க தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய 6 ஆறுகளை இணைக்கத் திட்டம். 
  • சூரிய பிரகாஸ் பிரச்சார் பாரதியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • எஸ்.கே. சௌராஸ்யா இந்தியன் ஆர்டினன்ஸ் பேக்டரியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ஐநா சபையின் சுற்றுச்சுழல் கமிட்டியின் நல்லெண்ண தூதுவராக தியா மிஸ்ரா தேர்வு. United Nations Environment Programme (UNEP) என்னும் இந்த அமைப்பு 1972 ல் மௌரிஸ் ஸ்ட்ராங் என்பர் தலைமையில் உருவானது. நைரோபி கென்யாவி உள்ள இதன் தற்போதைய தலைவர் எரிக் சோல்ஹெய்ம்.
  • தேசிய ஊட்டச் சத்து திட்டம் (National Nutrition Mission) மத்திய அமைச்சரவையினால் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. 9000 கோடியினாலான இத்திட்டம் தற்போதையக்கு 3 ஆண்டுகளுக்கு செயல்படும்.
  • National Payment Corporation of India NPCI யினால் Unified Payment Interface UPI உருவாக்கப்பட்டது.



EmoticonEmoticon