-->

Sunday, February 25, 2018

Tamil Current Affairs Notes 24-02-2018

Daily Current Affairs Notes  - 24th February 2018

  • "தமிழக மரக்களஞ்சியம்" என்னும் மொபைல் போனிற்கான செயலியை தமிழக வனத்துறை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது.
  • H1B விசா - விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விசாவின் காலவரையை 3 ஆண்டுகள். அமெரிக்கா செல்லும் வேலைக்கான கால அளவு எவ்வளவு என்று குறிப்பிட வேண்டும். விசா புதிபிக்கும் போது முன்பு செய்த வேலைக்கான ஆதாரம் சமர்பிக்கப்பட வேண்டும்.
  • சட்ட விரோத பணபரிமாற்ற கண்காணிப்புக் குழு - கூட்டம் ஐரோப்பிய நாடான பிரேசிலில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 36 நாடுகள் உள்ளன. இந்த குழுவில் குறைந்தபட்சம் 3 நாடுகள் ஏதாவது ஒரு தீர்மானத்தினை எதிர்த்தால் அந்த தீர்மானம் நிறைவேறாது. தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்து வரும் காரணத்தினால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்க அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு 35 நாடுகள் ஆதரவளித்துள்ளன.
  • கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேவ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பிற்கு கனடாவின் ஆதரவு உள்ளது.
  • இந்தியாவின் DRDO அமைப்பின் தயாரிப்பான தனுஷ் ஏவுகணை 500 கிலோ எடை  சுமக்கும் திறன் கொண்டது. இரண்டு இஞ்சின்கள் உள்ள இது திரவ எரிபொருளால் இயங்கும். 350 கிமீ தொலைவு வரை தாக்கும் திறனுடையது. இது இந்திய இராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளது.
  • இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கழித்து தற்போது தான் மகாராஸ்டிராவின் எலிபெண்டா தீவு மின்சார வசதியினை பெற்றுள்ளது.
  • சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 107.55 கிமி தூரத்திற்கு 3 வழித்தடம் அமைக்க முடிவு.
    • 1. மாதவரம் - சிறுசேரி சிப்காட்
    • 2. மாதவரம் - சோழிங்கநல்லூர்
    • 3. கோயம்பேடு - கலங்கரை விளக்கம்.
  • இந்தியாவின் 3வது மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனம் ஜியோ.
  • தமிழகத்தில் பிறப்பு இறப்பு பதிவிற்கு சிஆர்எஸ் CRS Civil Registration System என்னும் முறை உருவாக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் Reproductive Child Health (RCH) என்னும் 12 இலக்கம் கொண்டு எண் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் வழங்கப்படுகிறது. 
  • TAPI (துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இந்தியா) காஸ் பைப் லைன் திட்டம். துர்க்மெனிஸ்தானின் செர்கேதாபாத் என்னும் இடத்தில் தொடங்கும் இத்திட்டம் இந்தியாவில் முடிவடைகிறது.  இதன் மூலம் இந்தியா 1400 கனமீட்டர், பாகிஸ்தான் 1400 கனமீட்டர், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்கன் 500 கனமீட்டர் எரிவாயு ஒவ்வொரு ஆண்டிற்கும் கிடைக்கும். TAPI யின் மொத்த நீளம் 1840 கிமீ.
  • தென்கொரிய ஆக்கித் தொடர் - இந்திய அணிக்கு ராணி ராம்பால் கேப்டன். இந்த தொடர் மார்ச் 3 முதல் 12 வரை நடைபெறுகிறது.


EmoticonEmoticon