-->

Tuesday, March 20, 2018

உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் சூடான் (Sudan)

உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம்


கென்யா நாட்டில் உள்ள ஓய் பெஜிட்டா வனவிலங்கு காப்பகத்தில் வாழ்ந்து வந்த சூடான் (Sudan) உலகத்தின் கடைசி வெள்ளை காண்டா மிருகம் (Northern White Rhino) ஆகும்.

சூடானின் வயது 45. இது தான் உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் ஆகும். 19.03.2018 அன்று வயது முதிர்வு காரணமாக இறந்து விட்டது. தற்போது உலகில் வெள்ளை ஆண் காண்டா மிருகம் என்பதே இல்லா நிலை ஏற்ப்பட்டுள்ளது.

உலகின்-கடைசி-வெள்ளை-காண்டாமிருகம்-சாவு
Picture Courtesy : BBC

இந்த காப்பகத்தில் நஜின் (Najin) மற்றும் ஃபட்டு (Fatu) என்கின்ற இரண்டு பெண் வெள்ளை காண்டாமிருகங்கள் வசித்து வருகின்றன. சூடானின் மறைவிற்குப் பின் தற்பொழுது உலகில் மொத்தமே இரண்டு வெள்ளை காண்டாமிருகங்கள் மட்டுமே உயிர் வாழ்கின்றன.

யானைக்கு அடுத்த மிகப்பெரிய பாலூட்டி விலங்கு காண்டாமிருகம் ஆகும்.

சுமத்திரான் (Sumatran) காண்டாமிருகங்கள் உலகில் 100 மட்டுமே உள்ளது.

ஜவான் (Javan) காண்டாமிருகங்கள் உலகில் 67 மட்டுமே உள்ளது.


EmoticonEmoticon