-->

Saturday, December 9, 2017

Daily Current Affairs Tamil Text - 9th Dec 2017

Daily Current Affairs  - 9th Dec 2017 

  • தமிழகத்தின் பொதுத்தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷிலாப் பிரியா பதவி ஏற்றார்.
  • இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமை வியாரவல்லா (Homai Vyarawalla) பிறந்த தினம் இன்று 09.12.1913. (இறப்பு 15.01.2012)
  • பிரபல பத்திரிகை ஆசிரியரும் எழுத்தாளருமான பாக்கியம் இராமசாமி காலமானார். அப்புசாமி கீதாபாட்டி கதாப்பாத்திரங்களை உருவாக்கியவர். இயற்பெயர் ஜ.ரா. சுந்தரேசன் (ஜலகண்டபுரம் ராமசாமி சுந்தரேசன்).
  • 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதம் வளர்ச்சி அடையும் என்ற மார்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இந்திய GDP 6.4 சதவீதம்.
  • உலக பாரா நீச்சல் சாம்ப்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை காஞ்சனமாலா தங்கம் வென்றார். இவர் பார்வையற்றவர். 200 மீட்டர் நீச்சல் போட்டியில் வென்ற முதல் இந்தியர்.
  • பிரெக்ஸிட் என்பது இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் தொடரலாமா அல்லது வெளியேற வேண்டுமா என்பது குறித்த நடந்த வாக்கெடுப்பு முறை. 29.03.2019 அன்று இங்கிலாந்து வெளியேற வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்கள் வாக்களித்தனர். ஐரோப்பிய யூனியனில் மொத்தம் 29 நாடுகள் உள்ளது. இந்த 29 நாட்டு மக்களும் இந்த நாடுகளுக்குள் செல்ல எந்த விசாவும் தேவையில்லை.
  • பலோன் டிஆர் விருது சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படுகிறது. போர்சுகல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5வது முறையாக இதனை பெற்றார்.


EmoticonEmoticon