Daily Current Affairs Notes - 25th February 2018
- பணிபுரியும் மகளிர்களுக்கு 50% மானியத்துடன் (அதிகபட்சம் 25000 ரூபாய்) ஸ்கூட்டர் வழங்கும் தமிழக அரசின் "அம்மா ஸ்கூட்டர்" திட்டம் பிரதமர் மோடியினால் தொடங்கி வைக்கப்பட்டது.
- கோவை மாவட்டம் பொள்ளாச்சி சிஞ்சுவாடி கிராமத்தில் 17 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
- ஹரியானா அரசுப் பள்ளிகளில் தினமும் காலை இறைவணக்கம் நிகழ்வுடன் காயத்ரி மந்திரம் படிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார். கட்சி : பிஜேபி.
- அந்தமான் கடல் பகுதியில் இந்தியாவுடன் 22 நாடுகள் இணைந்து நடத்தும் போர் பயிற்சி மார்ச் 2018ல் நடைபெறுகிறது.
- தெலுங்கானா மாநிலத்தில் விவசாய நிலங்களின் ஆவணங்களில் அதன் உரிமையாளர்களின் ஆதார் விவரங்கள் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பின்னர் "பட்டாதார்" என்னும் பாஸ்புக் வழங்கப்படும். தெலுங்கான முதல்வர் : சந்திரசேகர ராவ். கட்சி : தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி.
- கேரளாவில் பள்ளிகளில் மாணக்கர் சேர்க்கைக்கு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டமைக்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி. நிதிஆயோக்கின் சுகாதாரக் குறியீட்டில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. கேரள முதல்வர் : பினராயி விஜயன். கட்சி : இடது ஜனநாயக முன்னணி.
- இந்தியாவில் 11500 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFI - Non Banking Financial Institutions) உள்ளன. இவற்றில் 168 நிறுவனங்கள் மட்டும் வைப்புநிதி (Deposit) பெறுவதற்க தகுதி வாய்ந்தவை. இவ்வகை NBFI நிறுவனங்களின் சேவை குறைபாட்னை களைய இது வரை அமைப்பு ஏதும் இல்லை. i.e. Ombudsman Board. தற்போது RBI அமைப்பு, NBFIக்கான ஆம்புட்ஸ்மேன் மையத்தினை உருவாக்கியுள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா, டில்லியில் இவை அமைக்கப்படுகிறது.
- ஏப்ரல் 1 - 2018 முதல் மீண்டும் இ-வே பில் முறை அறிமுகம். டில்லியில், பீகார் துணை முதல்வர் சுசில் குமார் மோடி தலைமையில் மாநில நிதிஅமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்பதல் வழங்கப்பட்டுள்ளது.
- ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் உலககோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்தியாவின் அருணா பெண்களுக்கான வால்ட் பிரிவில் 13.649 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். உலக கோப்பை தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் அருணா ஆவார். முன்னதாக ஆசிஸ்குமார் 2010ல் டில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் (வெண்கலம்) வென்றிருந்தார். தீபாகர்மாகர் 2014ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் (வெண்கலம்) வென்றிருந்தார்.
- உலககோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டி 1975 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
- தங்கம் : ஜாசா கைஸ்லெப் (ஸ்லோவினா நாடு) 13.8 புள்ளிகள்.
- வெள்ளி : எமிலி ஒயிட் ஹெட் (ஆஸ்திரேலியா) 13.69 புள்ளிகள்.
- ரசகுல்லா இனிப்பு தின்பண்டத்திற்கு ஒரிசா "ஒடிசா ரசகுல்லா" என்னும் பெயரில் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பம் செய்துள்ளது.
- நவம்பர் 2017 ல் மேற்கு வங்காளம் மாநிலம் ரசகுல்லாவிற்கு புவிசார் குறியீடு பெற்றது.
- மேற்குவங்காளம் 2017 ஆம் வருடம் துலாய்பஞ்சி மற்றும் கோவிந்தபோக் என்ற இரு அரிசி வகைகளுக்கு GI என்னும் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.
- புவிசார் குறியீடானது 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். பின்பு மீண்டும் குறியீட்டை புதுபிப்பு செய்து கொள்ள வேண்டும்.
- Intellectual Property Appellate Board (IPAB).
- ரசகுல்லாவினை கண்டு பிடித்தவர் நோபின் சந்திரதாஸ்.
- புவிசார் குறியீடு பெற்றவை Geographical Indication (GI)
- பங்கனப்பள்ளி மாம்பழம் (ஆந்திரா) 2017
- துலாய்பஞ்சி அரிசி (மேற்கு வங்காளம்) 2017
- கோவிந்தபோக் அரிசி (மேற்கு வங்காளம்) 2017
- போச்சம்பள்ளி இக்கட் (Ikat) துணி (தெலுங்கானா) 2017
- துர்கி கற்கீரல் சித்திரம் (ஆந்திரா)
- எத்திகோப்பக்கா பொம்மை (ஆந்திரா)
- சக்ஸேசாங் சால்வை (நாகாலாந்து)
- டார்ஜிலிங் தேயிலை
- திருப்பதி லட்டு
- BioAsia 2018 கான்பரன்ஸ் ஹைதராபாத். 22-24 பிப்ரவரி 2018. 15 வது மாநாடு இது.
EmoticonEmoticon