-->

Saturday, February 6, 2016

Current Affairs 06.02.2016

Current Affairs 06.02.2016

இன்று முதல் தினமும் நடப்பு நிகழ்வுகள் பதிவிடப்படும். வாரத்திற்கு ஒருமுறை அந்த ஒருவார நிகழ்வுகளிலிருந்து Quiz கேள்வி கேட்கப்படும்...


  • தமிழ்நாட்டில் 2014 ஆம் ஆண்டு முதல் தாய்ப்பால் வங்கி செயல்படத் தொடங்கியது. இது சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் ஆரம்பிக்கப்பட்டது. தானம் பெறப்பட்ட இத்தாய்ப் பால் முற்றிலும் சுகாதாரமான முறையில் பாதுகாக்கப்பட்டு 6 மாதகாலம் பயன் படுத்தலாம்.

  • மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இயங்கும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினை சிறந்த முறையில் செயல்படுத்தியதற்கு தமிழக அரசிற்கு தேசிய விருது. 2006 ஆம் ஆண்டு முதல் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுகிறது. மரக்கிளைகளை வெட்டி நடுதல் மூலம் சிறப்பான பணியாற்றியமைக்கு புதுக்கோட்டை மாவட்டம் விருதினை பெறுகிறது. மொத்தம் 25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான முறையில் வேலைவாய்ப்பு வழங்கியமைக்கு விருது கிடைத்துள்ளது.

  • 12வது தெற்காசிய விளையாட்டு போட்டி அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் 05.02.2016 அன்று துவங்கியது. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் 8 நாடுகள் கலந்து கொள்கின்றன. அவை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம்,  மாலத்தீவு, வங்காளதேசம், பூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகும். மொத்தம் 23 விளையாட்டுகள் இடம்பெறுகின்றன.

  • உலக சமஸ்கிருத விருது....முதல் விருதை தாய்லாந்து இளவரசி சக்ரி சிரிந்தோர்ன் பெறுகிறார். 16வது உலக சமஸ்கிருத மாநாடு 2015ல் தாய்லாந்தில் நடைப்பெற்றது.


EmoticonEmoticon