-->

Tuesday, March 15, 2016

Current Affairs 13.03.2016 to 15.03.2016

Current Affairs 13.03.2016 to 15.03.2016

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்க்கை குறித்த ஆய்வு : ரஷியா மற்றும் ஐரோப்பா கூட்டு முயற்சியில் விண்கலன் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்த விண்கலமானது பூமியிலிருந்து கிட்ட தட்ட 50 கோடி கிமீ (49.6) தூரத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் ஏதும் உள்ளதா அல்லது உயிரினங்கள் வாழ ஏதுவான சூழ்நிலை நிலவுகிறதா என்று கண்டறிய அனுப்பப்பட்டுள்ளது.

ரோஸ்காஸ்மோஸ் விண்வெளிஏவுதளத்தில் இருந்து இது அனுப்பப் பட்டுள்ளது. டிரேஸ்கேஸ் ஆர்பிட்டர் என்னும் ஆய்வு சாதனம் இந்த விண்கலத்துடன் அனுப்பப் பட்டுள்ளது.


நாட்டின் பண வீக்கம் சதவிகிதம் : கடந்த 16 மாதங்களா 0 சதவிகிதத்திற்கும் கீழாகவே இருந்த பணவீக்கமானது மேலும் சரிந்தது. கடந்த மாதம் 0.95 % என்று இருந்தது பிப்ரவரியில் 0.91% என்றளவில் குறைந்தது.


அக்னி 1 ஏவுகணை சோதனை : 700 கிமீ முதல் 1250 கிமீ தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் வகை இந்திய தயாரிப்பான இந்த ஏவுகணை ஒடிசி மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் விண்ணில் ஏவி சோதித்துப் பார்க்கப்பட்டது. செலுத்தப்பட்ட 9 நிமிடம் 26 விநாடிகளில் குறித்த இலக்கை தாக்கியது. இந்த ஏவுகணை ஏற்கனவே பலமுறை சோதித்துப் பார்க்கப்பட்டு இந்திய இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 


சில மருந்து மாத்திரைகளுக்கு இந்திய அரசு தடை உத்தரவு : 
344 மருந்துகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை : இந்திய அரசு 344 மருந்துகளை தடை செய்துள்ளது. இந்த மருந்துகளை பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் உண்டாகின்ற காரணத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது.


Courtesy : Dinamalar / Dinamani Tamil Daily


EmoticonEmoticon