கர்தார்பூர் வழித்தடம் (இந்தியா - பாகிஸ்தான்)
Current Affairs Facts 15.03.2019
கர்தார்பூர் வழித்தடம் (Kartarpur Corridor) :
சீக்கிய மதத்தினை உருவாக்கிய குருநானக் அவர்களின் சமாதி நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கர்தார்பூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. குருநானக் தனது வாழ்நாளில் 18ஆண்டுகள் இந்த இடத்தில் வாழ்ந்துள்ளார். இந்த கர்தார்பூர் பகுதியானது இந்தியா பாகிஸ்தான் நாடுகளின் சர்வதேச எல்லையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பாகிஸ்தான் பகுதியில் உள்ளது. இந்த சாமாதிக்கு தர்பார் சாகிப் குருத்வாரா என்று பெயர்.
தற்போது இந்த தர்பார் சாகிப் குருத்வாரா செல்ல வேண்டுமானால் பாகிஸ்தானிடம் விசா பெற்றுச் செல்லவேண்டும்.
இந்தியாவின் குருதாஸ்பூரையும் பாகிஸ்தானின் தர்பார் சாகிப் குருத்வாராவையும் இணைக்கும் வகையில் கர்தார்பூர் சாலை வழித்தடம் அமைக்க 26.11.2018 அன்று இந்திய குடியரசு தலைவர் வெங்கைய நாயுடுவும், 28.11.2018 அன்று பாகிஸ்தான் பகுதியில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானும் அடிக்கல் நாட்டினர்.
கர்தார்பூர் வழித்தடம் (Kartarpur Corridor) மொத்தம் 4 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதன் மொத்த செலவையும் இந்தியா ஏற்கிறது. இந்த கர்தார்பூர் வழித்தடம் வழியாக செல்ல பாகிஸ்தானின் விசா தேவையில்லை.
EmoticonEmoticon